தெஹிவளை கடலில் சுழியோடியொருவரை தாக்கிய முதலையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
தெஹிவளையில் நேற்றைய தினம் இருந்த முதலை, இன்று வேறொரு பகுதியை நோக்கி சென்றிருக்கக்கூடும் இருப்பினும், முதலை நடுகடலில் இருப்பதற்கான சாத்தியம் தற்போது கிடையாது என கூறிய அவர், அந்த முதலை கலப்பை நோக்கி வருகைத் தந்திருக்கும் எனவும் குறிப்பிடுகின்றார்.
மேலும் , கடற்படை மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்த முதலையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கூறுகின்றார்.