follow the truth

follow the truth

December, 23, 2024
Homeஉள்நாடுநாட்டின் பசுமை விவசாயத் திட்டத்துக்கு ஐ.நா. பாராட்டு

நாட்டின் பசுமை விவசாயத் திட்டத்துக்கு ஐ.நா. பாராட்டு

Published on

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கனி விக்னராஜாவுக்கும் (Kanni Wignaraja) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில், இன்று(04) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுகளைத் தெரிவித்தது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, 2021 பேண்தகு அபிவிருத்தி அறிக்கையின்படி இலங்கை மேலும் ஏழு புள்ளிகளைப் பெற்று, 165 நாடுகளில் 87ஆவது இடத்தைப் பெற்றுள்ளதென, திருமதி விக்னராஜா சுட்டிக்காட்டினார்.

இந்நிலைமையை மேலும் மேம்படுத்தி, பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார பாதிப்புகள் தொடர்பில் உரையாற்றும் போது, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“காலநிலை மாற்றத்துக்கு நிலையான தீர்வுகளுடன் கூடிய பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதிச் செயலணி மற்றும் “பொருளாதாரப் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான செயலணி உள்ளிட்ட முறையான கட்டமைப்பு ஒன்று இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதென, ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

நாளை (23) முதல் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள...

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார...

பண்டிகை காலங்களில் விற்கப்படும் கேக் விலைகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை

பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை...