ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு எதிர்வரும் வார இறுதியில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
அத்தியாவசித் துறைகளைத் தவிர பிற துறைகளின் அரசு ஊழியர்களுக்கும் இனி வீட்டில் இருந்தே வேலை செய்ய வைக்கப்படுவார்கள் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஒமிக்ரான் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. 8-10 நாட்களில் 11,000 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.