Homeஉள்நாடுயாழில் 1,600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

யாழில் 1,600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம், சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிசார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன் பொழுது இருவகையினை சேர்ந்த 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றினர். தொடர்ந்து கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular