Homeஉள்நாடுயாழ்.நூலகத்துக்கு நிதி ஒதுக்குவதைவிட அதிகாரப்பகிர்வே தமிழர்களுக்கு முக்கியம்!

யாழ்.நூலகத்துக்கு நிதி ஒதுக்குவதைவிட அதிகாரப்பகிர்வே தமிழர்களுக்கு முக்கியம்!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்லக்கூடிய அதிகாரப்பகிர்வையே வடக்கு, கிழக்கு மக்கள் கோருகின்றனர் எனவும், எனவே, அதனை வழங்குவதற்குரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வடக்கு தொடர்பிலும், தமிழ் மக்கள் தொடர்பிலும் ஆளுங்கட்சி சாதகமாக கதைத்துவருகின்றது. இது நல்ல விடயம்.
அதேபோல யாழ். பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்வதற்கு பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் வரவேற்ககூடிய விடயம். ஆனால் இதைவிடவும் வேறொறு விடயத்தையே வடக்க, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரசமைப்பு மறுசீரமைப்பு, 13 இற்கு அப்பால் சென்ற அதிகாரப்பகிர்வு என்பன தொடர்பில் அம்மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. இந்த பாதீட்டில் இதற்குரிய தீர்மானம் எடுக்கப்பட்டதா? இதற்குரிய அடித்தளம் இடப்பட்டுள்ளதா? கலந்துரையாடல் இடம்பெற்றதா?

வடக்கு, கிழக்கு மக்கள் நூலகத்தை கேட்கவில்லை, அதிகாரப்பகிர்வையும், தமது உரிமைகளை பாதுகாக்கக்கூடியவாறான வேலைத்திட்டமொன்றையுமே எதிர்பார்க்கின்றனர். அதற்கு தேவையான நடவடிக்கையை எடுங்கள்.” – என்றார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular