Homeஉள்நாடுபதுளை பகுதியில் பஸ் மோதி பெண் பலி!

பதுளை பகுதியில் பஸ் மோதி பெண் பலி!

பதுளை, பண்டாரவளை வீதியின் ஹல்பே பகுதியில் தனியார் பஸ்ஸொன்று நேற்று மாலை பெண்ணொருவர்மீது மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

குடுகல்பதன, ஹெலஹல்பே, பண்டாரவளையில் வசிக்கும் 49 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், ஹல்பே எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கும் கும்பல்வெல பகுதிக்கும் இடையே பயணித்த போது, ​​வீதியோரம் நடந்து சென்ற இரு பெண்கள் மீது பஸ் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பெண் ஒருவர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் பின்னர் பேருந்தின் சாரதியாக இருந்த ரத்னபுர, பரகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தெமோதர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular