Homeஉள்நாடுநீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது!

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது!

கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (19) பிற்பகல் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

34 வயதான இளைஞர் ஒருவரே, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கொழும்புக்கு அழைத்து வந்து விசாரணை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

பாதாள குழு தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்தார். சட்டதரணிபோல் நீதிமன்றத்துக்கு வருகை தந்தே சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular