பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 25 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரினால் இந்த 25 லட்சம் ரூபா அடங்கிய காசோலை, பிரியந்த குமாரவின் மனைவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.