Homeஉள்நாடுஅரச மாளிகையிலிருந்து வெளியேற மஹிந்தவுக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பு!

அரச மாளிகையிலிருந்து வெளியேற மஹிந்தவுக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பு!

அரசாங்க மாளிகையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியேற வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர் எனவும், எனவே, சட்ட நடவடிக்கைக்கு செல்வதற்கு முன்னர் அவர் வெளியேறினால் நல்லது  எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“  முன்னாள் ஜனாதிபதிகள் மூவர், அரசாங்க வதிவிடங்களை கையளித்துவிட்டனர். இன்னும் மூவரே கையளிக்க வேண்டியுள்ளது. அவற்றை கையளிக்குமாறு அறிவித்துவிட்டோம்.

எனவே, மனசாட்சியின் பிரகாரம் கௌரவமாக வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முடிந்தால் வெளியேற்றுங்கள் என மஹிந்த ராஜபக்ச சண்டித்தனம் காட்டிக்கொண்டிருக்கின்றார். சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், பொதுநிர்வாக அமைச்சிடம், அரச வீட்டை கையளித்துவிட்டு வெளியேறினால் சிறப்பு.

மஹிந்த ராஜபக்ச வெளியேற வேண்டும் என்பதையே நாட்டு மக்களும் விரும்புகின்றனர். கடிதம்தான் வேண்டுமெனில் அதுவும் அனுப்பிவைக்கப்படும்.” -என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular