Homeஉலகம்பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்குமென்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டொலரை விட்டு விலகிச்செல்ல முயற்சிக்கின்றன. நாங்கள் அதை ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் காலம் முடிந்துவிட்டது.” எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிரிகளைப் போலத் தோன்றும் அந்த நாடுகளுடன் நாங்கள் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறோம்.

அவர்கள் புதிய பிரிக்ஸ் கரன்ஸியை உருவாக்கக் கூடாது அல்லது டொலருக்கு நிகராக மற்றொரு கரன்ஸியைத் தேடக் கூடாது, இல்லையென்றால் 100 சதவீத வரிவிதிப்பைச் சந்திக்க நேரிடும்.” எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எதியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமிரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular