நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர், யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிளொக் செயின் எனப்படும் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது.
இது இளைஞர்களின் கல்வி, தொழில்சார் தகுதிகள் மற்றும் ஏனைய தகுதிகளுக்கான தரவுத்தளமாக இயங்கும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலத்திரனியல் அடையாள அட்டைகளைத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.