தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் (Cape Town) உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீ ஏற்பட்டிருப்பதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை.
நாடாளுமன்றத்தின் கூரையிலிருந்து புகைமண்டலம் வெளியேறுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.