இலங்கைக்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்து இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் (SLTDA) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை விசாக்களை வழங்கும் பயண மற்றும் குடிவரவு முகவர் என கூறி இணையத்தில் காணப்படும் போலி தளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா நோக்கங்களுக்கான ஒரே அதிகாரப்பூர்வ இணைத்தளம் eta.gov.lk/slvisa என்பதை மீண்டும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.