துங்கலப்பிட்டிய – கெபுனுகொட கடலில் நேற்று நீராடச் சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
17 மற்றும் 23 வயதுகளையுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களுடன் சென்ற மற்றைய நபர் கடலில் மூழ்கியுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பேவல பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் காணாமல் போயுள்ளதுடன், அவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.