follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்புதிய வகை கொவிட் திரிபு இஸ்ரேலில் கண்டுபிடிப்பு!

புதிய வகை கொவிட் திரிபு இஸ்ரேலில் கண்டுபிடிப்பு!

Published on

கொவிட் வைரஸ் மற்றும் சாதாரண காய்ச்சலுக்கான (ப்ளூ) நோய் அறிகுறிகள் காணப்படுவதால், இதற்கு ‘ஃப்ளுரோனா’ என பெயரிடப்பட்டுள்ளது.

மத்திய இஸ்ரேலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இந்த புதிய வகை கொவிட் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, குறித்த பெண், கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர் என்பதுடன், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன், கொவிட் தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவருக்கு பாரிய அளவில் உடல்நிலை பாதிக்கப்படவில்லை எனவும், விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் இஸ்ரேலின் சுகாதாரத்துறை ஆய்வுகளை முன்னெடுத்து வருவதுடன், இருவகை தொற்றுக்கள் ஒன்று சேர்வதால் பாரியளவில் பாதிப்பு ஏற்படும் என அச்சம் கொள்வதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.

ஒமைக்ரொன் பாதிப்பினால், இஸ்ரேலில் ஐந்தாவது கொவிட் அலை ஆரம்பமாகியுள்ள நிலையில், தற்போது இந்த புதிய வகை கொவிட் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...