follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்கே இப்புத்தாண்டு பிறந்துள்ளது - பிரதமர்

அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்கே இப்புத்தாண்டு பிறந்துள்ளது – பிரதமர்

Published on

அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்கே இப்புத்தாண்டு பிறந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இந்த புத்தாண்டில் உறுதிகொள்வோம்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு முகங்கொடுத்து கடந்த ஆண்டில் இலங்கை எதிர்நோக்கிய சவால்கள் பலவாகும்.

சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான சவால்களை வெற்றி கொள்வதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றிய அர்ப்பணிப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மக்களின் பாதுகாப்பிற்காகவே கடந்த ஆண்டில் முன்னுரிமை வழங்கியிருந்தோம்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக செயற்படுத்தியதன் ஊடாக ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை எமக்கு பாதுகாக்க முடிந்தது.

தொற்று நிலைமைக்கு மத்தியிலும் எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் இடைநிறுத்தாது, மக்களின் வாழ்க்கை நிலையைக் கட்டியெழுப்பி அபிவிருத்தி ஒளியை முழு நாட்டிற்கும் பரப்புவதே அரசாங்கத்தின் எதிர்கால இலட்சியமாகும்.

அதற்காக சமூக பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக எம்மத்தியில் காணப்படும் பல்வேறு தடைகளை முறியடிக்க வேண்டும்.

ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக சரியானதை தெரிவுசெய்து அதற்காக செயற்படுவதன் ஊடாக தற்போது காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்க்க முடியும்.

அதற்காக அனைவரும் எதிர்பார்க்கும் புதிய பாதை இன்று உதயமாகும் புத்தாண்டில் வெளிப்படுத்தப்படும்.

அனைவரும் ஒன்றிணைந்து தடைகளை முறியடித்து வாழ்வை வெல்லும் ஆண்டாக இப்புத்தாண்டை உருவாக்குவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மலர்ந்துள்ள 2022ம் ஆண்டு அனைவருக்கும் வளமானதும், ஆரோக்கியமானதுமான ஆண்டாக அமைய வேண்டும் என சூரியன் செய்திப் பிரிவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...