அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் கடன் கோரியுள்ளார்.
இது தொடர்பில் வர்த்தக அமைச்சர், இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரிசி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை கொள்வனவு செய்துவரும் நிலையில், மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் கொள்வனவுக்காக இவ்வாறு கடன் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.