follow the truth

follow the truth

September, 20, 2024
Homeவிளையாட்டுஇந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

Published on

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில், இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

சென்சூரியனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 327 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 123 ஓட்டங்களையும் மாயங் அகர்வால் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி 6 விக்கெட்டுகளையும் ரபாடா 3 விக்கெட்டுகளையும் மார்கோ ஜென்ஸன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 197 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெம்பா பவுமா 52 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 5 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 130 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 174 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கு 305 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 34 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரபாடா மற்றும் மார்கோ ஜென்ஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 305 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 191 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டீன் எல்கர் 77 ஓட்டங்களையும் டெம்பா பவுமா ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மொஹமட் சிராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல். ராகுல் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி ஜோகனஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர்...

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...