இலங்கையில் பல திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக வந்துள்ள சீனப் பிரஜைகள், தற்போது இலங்கைப் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
கடத்திச் செல்லப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பத்து இலங்கைச் சிறுமிகள் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைத்துள்ளதாகச் சிரேஷ்ட பாதுகாப்புத் தலைவர் ஒருவர் தகவல் அளித்துள்ளார்.
மேலும் , இவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அழகான இளம் பெண்களைத் தேர்வு செய்து திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று இரவு விடுதிகளில் பணியமர்த்துவது தெரியவந்துள்ளது.
குறித்த மோசடி தொடர்பில் விரைவாக விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.