எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் டுபாய் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எக்ஸ்போவில் இலங்கைக்கான தேசிய தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஜனவரி 3 ஆம் திகதி நிகழ்வின் பிரதம அதிதியாக வருகை தருமாறு டுபாய் ஆட்சியாளரான மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூமினால் பிரதமர் ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்தியில் பிரதமர் ராஜபக்ஷ அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட டுபாய் பயணத்தை இரத்து செய்துள்ளதாக பிரதமரின் தலைமை அதிகாரியான யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.