சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள 18,453 கைதிகளுக்கு மூன்றாவது கட்ட தடுப்பூசியாக பைசர் வழங்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் நிர்வாக மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெலிக்கட, மெகசின், கொழும்பு ரிமாண்ட், வடரெகா, மஹர மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளுக்கு கைதிகளுக்கு இன்று (29) மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கும் மூன்றாவது கட்ட தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளாா்.