நாட்டில் 1500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உரம் தற்பொழுது பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக உரச் செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட முன்னதாக 50 கிலோ கிராம் எடையுடைய ஒரு மூட்டை உரம் 1500 முதல் 2000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும் தற்போது ,ஒரு மூட்டை உரம் சுமார் பத்தாயிரம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரத்தை விவசாயிகளினால் கொள்வனவு செய்யக்கூடிய நியாயமான விலைக்கு விற்பனை செய்வது குறித்து இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.