சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ஜனவரி 7 மற்றும் 9 ஆம் திகதிகளுக்கு இடையில் அவரது இரு நாள் விஜயம் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான டொலர் தட்டுப்பாடு, வெளிநாட்டு முதலீடு இல்லாமை சர்வதேச நிதி வீழ்ச்சி மற்றும் சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பல் சிக்கல் போன்றவற்றினால் நாடு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள நிலையில் வாங் யியின் விஜயம் அமையவுள்ளது.
இந்த விஜயதின் போது சீனாவிற்கு இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் கருதி, வாங் யீ பல முதலீட்டு திட்டங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.