புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புகையிரத நிலைய அதிபர்கள் நாளை (29) முதல், பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.