காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்து தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு எதிர்வினையாற்றியுள்ளது. அதன்படி இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க தடை விதித்தும், இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி வைக்கவும் பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது.