அடுத்த நான்கு முதல் ஆறு மாத மாதங்களுக்கு தேவையான இன்சுலின் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்து இருப்பை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.