சிறி தலதா வழிபாட்டுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அவசியமான தகவல்களை ஒரே இடத்தில் இருந்து இணையம் மூலம் பெறுவதற்காக விசேட வலைத்தளம் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகள், தங்கியிருக்கும் இடத்தில் இருந்து சுகாதார வசதிகள் உள்ள இடங்களுக்கான பயண வழிகளை அறிந்து கொள்வது, தானசாலைகள், தொலைந்தவர்களை கண்டறிவது, முதலுதவி சேவைகள் உள்ள இடங்களை கண்டறிவது போன்ற பல விசேட அம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது.
அத்துடன், மூன்று முக்கிய வரிசைகளில் இந்த வலைத்தளத்திற்கு அணுகக்கூடிய QR குறியீடுகள் அடங்கிய பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
அல்லது https://info.sridaladamaligawa.lk/ மூலம் இதனை அணுகலாம் என தெரிவிக்கப்படுகிறது.