நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் 23 ஆம் திகதி புதன்கிழமை வத்திக்கான் நேரப்படி காலை 9 மணிக்கு சென் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் வரை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை எதிர்வரும் சனிக்கிழமை(26) இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.