முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 11 சந்தேக நபர்களுக்கு எதிரான தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஆன்டிபயடிக் தடுப்பூசி வழக்கை விசாரிக்க நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் கடந்த 9 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது வாக்குமூலம் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பதிவு செய்யப்பட்டது.