சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்று (22) மற்றும் நாளை (23) வழங்கப்படும் என விவசாய சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒன்பது மாவட்டங்களுக்கு இந்த பணம் விடுவிக்கப்படும் என்று கமநல சேவைகள் ஆணையர் நாயகம் ரோஹண ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.25,000 வீதம், அதிகபட்சமாக 2 ஏக்கர் வரையில் உர சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மற்றும் நாளை மொத்தமாக ரூ.157 மில்லியன் மதிப்பிலான தொகை வழங்கப்படவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.