follow the truth

follow the truth

April, 22, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சமாக செயற்படுகின்றது

தேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சமாக செயற்படுகின்றது

Published on

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பு என்றும், இருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான இவ்வாறான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் (21) தேர்தல் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்தது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கன்டவாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இவ்வாறான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதில் எந்த நன்மையும் இல்லையெனக் குறிப்பிட்டதுடன்,

வேட்புமனு தாக்கல் செய்தபோது சில சபைகளின் வேட்புமனுக்கல் நிராகரிக்கப்பட்டன. அச்சபைகளை நீதிமன்றத்தின் மூலம் மீள பெற்றுள்ளோம்., சில சபைகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளோம்.

அத்தோடு மஸ்கெலியா உள்ளூராட்சி மன்ற சபை ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தேர்தல் ஆணையாளரிடம் வினவியபோதும், அங்கீகரிக்கப்பட்ட நபர் வேட்புமனு தாக்கல் செய்யாமல் வேறு நபர் தாக்கல் செய்யப்பட்டமையினால் நிராகரிக்கபட்டது என தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக எங்களுடைய கட்சியிலே வேட்புமனு அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு சுகயீனம் கராணமாக அவரின் மருத்துவ சான்றிதல் சமர்பித்து அவருக்கு பதிலாக நியமித்திருந்த மாற்று நபருக்கு சமாதான நீதவானின் சான்றிதல் வழங்கியிருந்தும் எங்களுடைய கட்சியின் மஸ்கெலியா பிரதேச சபையின் வேட்புமனுவினை நிராகரித்து இருந்தனர். இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியபோது அவர் அதற்கு எவ்வித பதிலும் வழங்கவில்லை.

மேலும் ஜனாதிபதி அனுரகுமார திசாநயக்க அவர்கள் தேர்தல் பிரசாரங்களின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெரும் எங்களுடைய (தே.ம.ச) கட்சியை சார்ந்த உறுப்பினர்களுக்கே நிதி ஓதுக்கீடு மேற்கொள்வேன் என்றும் மாற்று கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக யோசிப்போம் என்றும் கூறிவருகின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேவேளை ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பிலும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். அத்தோடு நாட்டின் ஜனாதிபதி என்பதை மறந்து எதிர்க்கட்சி தலைவர் என்று நினைத்து தேர்தல் மேடைகளில் பேசிவருகின்றார்.

மேலும் கண்டி தலதா மாளிகையில் பௌத்த மதம் சார்ந்து நடைபெறும் சமய வழிபாட்டை தாம் வரவேற்பதாகவும், எனினும் குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்ட விடயம் வருத்தமளிப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

தேர்தலை முன்னிட்டு கல்வி ரீதியிலான செயற்பாடுகள், பொருளாதார ரீதியான செயற்பாடுகள், காணி உரிமை தொடர்பிலான செயற்பாடுகள் ஆகியவற்றைத் தடைசெய்யும் தேர்தல்கள் ஆணைக்குழு சமய செயற்பாடுகளுக்கு மட்டும் தடை விதிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் – பிரேம்நாத் சி. தொலவத்த

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், இது தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயற்பாடாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

பிள்ளையானுக்காக நாமல் முதலைக்கண்ணீர் வடிக்க காரணம் இருக்கு – அமைச்சர் நளிந்த

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம்...

அரசு ஈஸ்டர் தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது – நாமல் குற்றச்சாட்டு

துரதிஷ்டவசமாக தற்போதைய அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலின் துயரத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...