இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business Plan) ஏற்ப தெரிவு செய்யப்பட்ட டிப்போக்கள் 25 முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
டிப்போ மறுசீரமைப்பு திட்டத்துடன் தொடர்புடைய இரத்தினபுரியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சப்ரகமுவ பிராந்திய அலுவலகத்தை மேற்பார்வையிட்ட விஜயத்தில் நேற்று (20) கலந்து கொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்;
‘”அன்று சில நபர்கள் திருட்டுக்கு பங்களிப்பு செய்தார்கள். ஏனையவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெரிய பெரிய ஆட்கள் பெரிய பெரிய அளவில் திருட்டை மேற்கொள்ளும் போது சிறிய சிறிய நபர்கள் சிறிய சிறிய திருட்டை செய்வதற்கு பழக்கப்பட்டார்கள்.
அமைச்சர் திருட்டை மேற்கொண்டு நிறுவனத்தை அழிப்பதைக் கண்ட சிறு ஊழியருக்கு சுற்றும் மின் சிறியை அணைப்பதற்கு தோன்றுவதில்லை.
இலங்கை போக்குவரத்துச் சபையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் தயார். அதற்காக சகல தரத்திலான சகல ஊழியர் குழுவினதும் ஒத்துழைப்பு அவசியம்.
தற்போது காணப்படும் நிலைமையில் இலங்கை போக்குவரத்து சபை இலாபம் ஈட்டுவதற்கு முன்னர் இடம்பெறும் நட்டத்தை நிறுத்துவது அவசியம் இல்லை. டிக்கெட் வழங்குதல் மற்றும் டிக்கெட் பணத்தை சேகரிப்பதை சரியாக மேற்கொள்ள வேண்டும். இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு தமது தொழில் தொடர்பாக மதிப்பொன்றை ஏற்படுத்த வேண்டும்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்துடன் காணப்படும் நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வலியுறுத்திய அமைச்சர், நெருக்கடியான நிலைமையில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் இலஞ்சம் ஊழல் என்ற இரண்டு பக்கங்களையும் ஒழித்து, இலங்கை போக்குவரத்து சபையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.