புனிதமான ஸ்ரீ தலதா புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் சிறி தலதா வழிபாட்டின் நான்காவது நாள் இன்று (21) ஆகும்.
அதன்படி, புனித தந்த தாது காட்சி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மாலை 5.00 மணி வரை இதை நடத்த தலதா மாளிகையால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
“சிறி தலதா வாழிபாடு” எதிர்வரும் 27 ஆம் திகதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளதுடன், இதன் தொடக்க விழா கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
முதல் நாளிலிருந்து, நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் தலதா மாளிகைக்கு சென்று புனித தந்த தாதுவை வழிபட்டு வருவதுடன், அங்கு வரும் பக்தர்களின் தாகத்தைத் தணிக்க 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதேவேளை, நேற்று (20) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமான ஸ்ரீ தலதா வழிபாடு மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.
அதன்படி, நேற்று, சுமார் 1 இலட்சத்து 50,000இற்கும் அதிகமான பக்தர்கள் புனித தந்த தாதுவை வழிபடும் பாக்கியத்தைப் பெற்றனர்.
இதேவேளை, சிறி தலதா வழிப்பாட்டுக் காலத்தில் கண்டியில் உள்ள கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் ஊடகப் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.