கோடை கால வெயிலுக்கு இதமான சர்பத் எளிதான முறையில் செய்வது எப்படி என்று இந்த பார்க்கலாம்.
கோடை வெயில் காலம் ஆரம்பம் ஆகி நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று(20) அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடிக்கிற வெயில சமாளிக்க உடம்ப நீர் சத்துக்களோட வைச்சுகிட்டதான் சரியாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் கோடைகால உணவுகள் மற்றும் தர்பூசணி, இளநீர் மோர் நுங்கு போன்ற தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் குறிப்பாக வெயில் காலத்தில் இளநீர் தவிர்க்க முடியாத தேவை. அது வெயிலின் வெப்பத்தைத் தனிக்கக் கூடிய இயற்கை நீர். ”வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் நீர்சத்து மூலமாக வெளியேறுகிறது. அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர்தான் சரியான உதவுகிறது. உடலுக்குத் தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சத்துக்கள் நிறைந்த இளநீர் வைத்து இளநீர் சர்பத் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
முதலில் இளநீர் தண்ணீர் மற்றும் அதில் உள்ள வழுக்கை பகுதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் இளநீர் தண்ணீர், வழுக்கை, ஊறவைத்த சப்ஜா விதைகள் மற்றும் ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து குடித்தால் சூப்பர் இளநீர் சர்பத் ரெடி. இளநீர் போலவே சப்ஜா விதைகள் மற்றும் பாதாம் பிசின் உடல் சூட்டை தணிக்க வல்லது என்பதும் குறிப்பிடத்தக்கது.