ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90,000ஐத் தாண்டியுள்ளது.
அதன்படி, இதுவரை 93,915 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள், எனவும் பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரை 816,191 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.