2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான் பெரிதும் தாக்கப்படும் என பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண், மிக விசித்திரமான முறையில், துல்லியமாக உலகில் நிகழவிருக்கும் அபாயங்கள் குறித்து முன்னமே கணித்து வருகிறார், அவை நிறைவேறியும் இருக்கின்றது
அந்தவகையில், 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலகையே புரட்டிப்போடும் சுனாமி பேரலைகள் தாக்கக் கூடும் என்று அவர் முன்கணித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பும், பாபா வங்கா கணிப்புகள் துல்லியமாக நடந்திருப்பதால், இவரது கணிப்புக்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
a
மங்கு கலை ஓவியராக உலகுக்கு அறிமுகமான இவர் தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரையத் தொடங்கினார். வரைந்தது போலவே அவ்வாறே நடந்தும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவரது ஓவியங்களை ஆதரவாளர்கள் தொடர்ந்து வந்துள்ள நிலையில், அடுத்தடுத்து உலகில் நடந்த சம்பவங்களோடு இவரது ஓவியங்கள் ஒத்துப்போவதை கண்டுள்ளன்ர
இந்த நிலையில் இவர் தெற்கு ஜப்பானின் கடல்பரப்பு கொதிப்பது போன்று ஓவியம் வரைந்திருக்கிறார்.
அதாவது ஜப்பானின் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை சீற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக மிக மோசமான சுனாமி ஏற்படலாம் எனவும் ஜப்பான் மட்டுமின்றி தைவான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் சுனாமியால் பாதிக்கப்படுவதை ஓவியமாக வரைந்துள்ளார்.