“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவின் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட இந்த அழைப்பிதழில், “ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்பதற்காக கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“சிறி தலதா வழிபாடு” நிகழ்வுக்காக இவ்வாறான எந்தவொரு சிறப்பு அழைப்பிதழும் எவருக்கும் வழங்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
மேலும், இந்த போலி அழைப்பிதழை அடிப்படையாகக் கொண்டு, சிறி தலதா வழிபாட்டிற்காக சிறப்பு (VIP) வரிசை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவி வருவதாகவும், அவற்றில் எந்தவொரு உண்மைத்தன்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.