தமக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் கிடைக்கின்றன என்றும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 900க்கும் மேற்பட்டவை, கிராம மட்டத்திலேயே தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இவை தீர்க்கப்படாமல் இருப்பதால் தான் அந்தக் குறைகள் தங்களிடம் வரை வந்து சேருகின்றன என்றும், இவையெல்லாம் நேரத்திற்கு தீர்க்க முயற்சி செய்யும் போதே, மற்ற முக்கியமான வேலைகளை செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கொழும்பு-கொலொன்னாவ பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் ஹரினி அமரசூரிய இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
“நீங்கள் நம்புவீர்களா? எனக்கு தினமும் 1000 கடிதங்கள் வருகிறது. அந்த 1000-இல் 900 கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரச்சினைகள் கிராமங்களில் தீர்க்கக்கூடியவையே. ஆனால் அவை தீர்க்கப்படவில்லை என்பதால்தான் மக்கள் என்னிடம் வந்து முறைப்பாடு அளிக்கின்றனர்.
இதற்காக நான் என் நேரத்தை செலவழிக்கையில், நான் செய்ய வேண்டிய மற்ற வேலைகளைச் செய்ய முடியாமல் போகிறது.
இந்த பிரச்சினைகளைத் தவிர்க்க, நமக்கு தேவை உள்ளூராட்சி சபைகள், நகர சபைகள் அனைத்தையும் சரியாக அமைத்து, செயல்படச் செய்வது.
அதனால் தான் இந்த தேர்தல் மிக முக்கியமானது. மே 6 ஆம் திகதி நடைபெறும் இந்த தேர்தல், ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் எவ்வளவு சிக்கலானது என்பது இப்போது நமக்குத் தெரிகிறது..”