“சிறி தலதா வழிபாடு” இன்று (18) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதனை காண கண்டிக்கு வரும் ஏராளமான வாகனங்கள் காரணமாக கண்டி-கொழும்பு வீதியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கண்டி நகரத்திலிருந்து கட்டுகஸ்தோட்டை பாலம் வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, கண்டி நகரின் வழியாகச் செல்லும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கண்டி நகரத்தின் ஊடாக வேறு பகுதிகளுக்குச் செல்பவர்கள், முடிந்தவரை கண்டி நகரத்தைத் தவிர்த்து மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.