காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த குழுவினர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்கு குறித்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும், உணவகத்தைச் சேர்ந்த ஆறு நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.