சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து பயணிகளிடமிருந்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களை வசூலிக்காதது தொடர்பாக 63 முறைப்பாடுகள், டிக்கெட்டுகள் வழங்கப்படாதது குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்தார்.
இந்த அனைத்து முறைபாாடுகள் தொடர்பான விசாரணகளை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
1955 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்து முறைபாடுகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.