follow the truth

follow the truth

September, 17, 2024
Homeவிளையாட்டுஓய்வை அறிவித்த ஜீவன் மெண்டிஸ்

ஓய்வை அறிவித்த ஜீவன் மெண்டிஸ்

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜீவன் மெண்டிஸ் 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளையும் 636 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

22 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜீவன் மென்டிஸ் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன் 207 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

கடைசியாக அவர் ஜூன் 2019 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ICC ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீராங்கனை ஹர்ஷிதா

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தெரிவு செய்து கௌரவித்து வருகிறது....

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

இலங்கை vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி...