தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதை விட, பொய்யான பிரகடனங்களைச் செய்வதில் திறமை மிகுந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஒரு பொதுமக்கள் சந்திப்பின் போது அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் பணியாற்றுவதில் சிறந்தவர்கள் எனப் பெரும்பாலானவர்கள் கருதினர். ஆனால் உண்மையில், அவர்கள் சேவை செய்வதில் அல்ல, பொய் கூறுவதில் வல்லவர்கள் என எதிர்கட்சித் தலைவர் விமர்சித்தித்திருந்தார்.
மக்களை ஏமாற்றும் விஷயத்தில் அவர்கள் சிறந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
பலஸ்தீன மக்களின் மீதான தாக்குதல்களில், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எந்தவிதமான பதிலளிப்பும் செய்யவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
இப்போது, பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக, எமது நாட்டின் ஒரு இஸ்லாமிய இளைஞரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுத்து வைக்கும் அளவுக்கு ஜனாதிபதி கையெழுத்திடும் நிலைக்கு அவர் தரம் தாழ்ந்துவிட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
அதனால், இவ்வாறு தரம் குறைந்த அரசியல் கலாசாரத்திற்கு ஒத்துழைக்க வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.