புத்தாண்டு காலத்தில் செயல்பட்ட பேரூந்து சேவைகளை தொடர்பான 143 முறைப்பாடுகள் தற்போது வரை பெறப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் அதிக கட்டணம் வசூலித்தல், பயணிகளிடம் மரியாதையின்றி நடந்து கொள்வது, மற்றும் அதிக வேகத்தில் பேரூந்துகளை செலுத்துவது போன்றவை அடங்குகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தொடர்பான விசாரணைகள் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முறைப்பாடு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தங்கள் கிராமங்களில் புத்தாண்டைக் கொண்டாடியவர்கள் மீண்டும் கொழும்புக்குத் திரும்புவதற்காக, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விசேட பேரூந்து மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.