இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர் கான். 2000-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக கங்குலி தலைமையின் கீழ் அறிமுகமான ஜாகீர் கான் (Zaheer Khan), 2014-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார்.
இவர் இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். 2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ஜாகீர் கான்.
இவர் நடிகை சாகரிகா கட்கேவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அந்த குழந்தைக்கு ஃபடேசின் கான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தம்பதியினருக்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
வழக்கமாக கிரிக்கெட் வீரர்கள் தங்களின் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போதுதான் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் ஜாகீர் கான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram