பொதுமக்களின் தேவைக் கருதி, இன்றும் (16) விசேட பேருந்துகள் சேவையில் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்ட தங்களது ஊர்களுக்குச் சென்ற பயணிகளுக்காக நாளை(17) முதல் விசேட பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அதுக்கோரல தெரிவித்தார்.
இதேவேளை, நாளை (17) முதல் பல விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.