இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்காக 12 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
கலப்பு உரம் மற்றும் யூரியாவை இறக்குமதி செய்வதற்கே குறித்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் உரத்தை நெற்செய்கை மற்றும் ஊடுபயிர்களான காய்கறிகள் மற்றும் பழ செய்கைகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.