ஈராக்கின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் புழுதிப் புயல் வீசியதை அடுத்து 1,000க்கும் மேற்பட்டோர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈராக் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல பகுதிகளில் மின்வெட்டு மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நஜாஃப்(Najaf) மற்றும் பாஸ்ரா(Basra) மாகாணங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அதிக தூசி நாட்களை அனுபவிக்கும் என்று அதன் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.