follow the truth

follow the truth

April, 19, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅண்ணன் - தம்பி மீண்டும் ஒன்றிணைவு! - மஹிந்தவின் ஆஷிர்வாதப் பதிவு (PHOTOS)

அண்ணன் – தம்பி மீண்டும் ஒன்றிணைவு! – மஹிந்தவின் ஆஷிர்வாதப் பதிவு (PHOTOS)

Published on

முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சர்கள் சிங்கள தமிழ் புத்தாண்டின் போது சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (14) இடம்பெற்றதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவிக்கையில்;

அதில், “எனது சகோதரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ச ஆகியோர் எனது உத்தியோகபூர்வ இல்லத்தில் என்னைச் சந்திக்க வந்தனர், நாங்கள் மிகவும் அன்பான உரையாடலை மேற்கொண்டோம்.

புத்தாண்டு தினத்தன்று அவர்கள் கைகளில் வெற்றிலையுடன் வருவதைப் பார்த்தபோது, ​​பக்மாவில் உறவினர்களை பார்க்க செல்லும் சம்பிரதாயமே எனக்கு நினைவுக்கு வந்தது.

அவர்கள் இருவருக்கும் வளமான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வில் பல நண்பர்களும் கலந்து கொண்டனர், அவர்களுக்கு வளமான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை தனது குடும்பம் மற்றும் பேரக்குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

May be an image of 8 people

May be an image of flower

May be an image of 3 people

May be an image of 3 people

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் கடிதங்கள் வருகின்றன.. பதில் வேண்டுமெனில் NPP இற்கு வாக்களியுங்கள் – பிரதமர்

தமக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் கிடைக்கின்றன என்றும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 900க்கும் மேற்பட்டவை, கிராம மட்டத்திலேயே...

நானும் ரௌடிதான் – அமைச்சர் இராமலிங்கம்

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல்,...

புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி

புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கோரிக்கை...