follow the truth

follow the truth

April, 16, 2025
Homeவிளையாட்டுIPL 2025: இன்று பலப்பரீட்சை நடத்தும் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள்

IPL 2025: இன்று பலப்பரீட்சை நடத்தும் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள்

Published on

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்றிரவு நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (குஜராத், லக்னோ, சென்னைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (ராஜஸ்தான், ஐதராபாத்துக்கு எதிராக) சந்தித்துள்ளது.

முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சபாப் 245 ரன்கள் குவித்த போதிலும் பந்து வீச்சு கைகொடுக்காததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 8 பவுலர்களை பயன்படுத்தியும் ஐதராபாத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இப்போது சொந்த ஊரில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் தயாராகியுள்ளனர். பஞ்சாப் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (3 அரைசதத்துடன் 250 ஓட்டங்கள்), பிரியான்ஷ் ஆர்யா (194 ஓட்டங்கள்), பிரப்சிம்ரன் சிங், வதேரா பேட்டிங்கில் மிரட்டுகிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், மார்கோ யான்சென் வலு சேர்க்கிறார்கள்.

ஆனால் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் இதுவரை ஜொலிக்கவில்லை. அவர்கள் பார்முக்கு வந்தால், பஞ்சாப் மேலும் வலிமையடையும்.

ஓராண்டுக்கு முன்பு கொல்கத்தாவுக்கு ஐ.பி.எல். கோப்பையை வென்றுத்தந்து சாதனை படைத்த ஸ்ரேயாஸ் அய்யர், எதிர்பாராத திருப்பமாக அந்த அணியில் தக்க வைக்கப்படவில்லை. அதன் பிறகு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர், இப்போது தனது பழைய அணியை நேக்கு நேர் சந்திக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது காயத்தால் பாதியில் வெளியேறிய பஞ்சாப்பின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் (4 ஆட்டத்தில் 5 விக்கெட்) காயத்தன்மை தீவிரமாக இருப்பதால் அனேகமாக எஞ்சிய போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார். அவர் விலகுவது, பஞ்சாப்புக்கு சற்று பின்னடைவு தான்.

கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி (ராஜஸ்தான், ஐதராபாத், சென்னைக்கு எதிராக), 3-ல் தோல்வி (பெங்களூரு, மும்பை, லக்னோவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 103 ஓட்டங்களில் சுருட்டிய கொல்கத்தா அணி அந்த இலக்கை 10.1 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. அதனால் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். பேட்டிங்கில் கேப்டன் ரஹானே (204 ஓட்டங்கள்), குயிடான் டி காக், சுனில் நரின், வெங்கடேஷ் அய்யரும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஆரோரா, ஹர்ஷித் ராணாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

மொத்தத்தில் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இந்த மைதானத்தில் நடப்பு சீசனில் நடந்துள்ள 2 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணி 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்து வெற்றி பெற்றுள்ளன.

ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 21-ல் கொல்கத்தாவும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷசாங் சிங், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் அல்லது ஆரோன் ஹார்டி, மார்கோ யான்சென், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப்சிங், யாஷ் தாக்குர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டான் டி காக், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப்சிங், மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வைபவ் ஆரோரா, வருண் சக்ரவர்த்தி.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எட்டு ஆண்டுகளுக்கு பின் தந்தையான ஜாகீர் கான் [PHOTOS]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர் கான். 2000-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக கங்குலி...

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் தெற்கு கலிபோர்னியாவில்

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரின் கிரிக்கெட் போட்டிகள் தெற்கு கலிபோர்னியாவின் பமோனா நகரில் நடாத்தப்படுமென சர்வதேச...

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர்

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில்...